ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்

 இன்றைய தினத்தில், ரசாயனங்களை தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இல்லத்தரசிகளும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களும் வீட்டில் எளிதாக தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த பொருள், 'ஆர்கானிக் ரோஜா எண்ணெய்' ஆகும். இது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு எளிமையான இயற்கை வழி.



ஆர்கானிக் ரோஜா எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம். முதலில் இதை சிறிய அளவில் தயாரித்து உபயோகித்து பாருங்கள். பின்பு இதன் பயன்களை நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் பரிந்துரையுடன் விற்பனை செய்யலாம்.


தேவையான பொருட்கள்:

  • ஆர்கானிக் ரோஜா பூக்கள் – 2 கப்
  • செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் – 1 கப்

தயாரிக்கும் முறை:

ரோஜா இதழ்களைத் தயாரித்தல்:
ஆர்கானிக் ரோஜா பூக்களை எடுத்து, இதழ்களை தனியாக பிரித்து கொள்ளுங்கள்.

குறிப்புகள்:
  • ரோஜா இதழ்கள் சுருங்கிச் செல்லும் முன், எண்ணெய்யை கவனமாகக் காய்ச்சி எடுக்க வேண்டும்.
  • எண்ணெய் தயாரித்த பின், நீராவி அதன் மேல் விழாமல் தடுக்க, பாத்திரத்தை சுத்தமாக மூடுவது அவசியம்.

⭕ அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவி, மெல்லிய பருத்தித் துணியில் போட்டு ஈரம் நீங்கும் வரை உலர்த்துங்கள்.

ரோஜா விழுதை அரைத்தல்:

⭕ உலர்ந்த இதழ்களை மிக்சியில் போட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

எண்ணெய் தயாரித்தல்:

⭕ அடிக்கனமான பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை ஊற்றி, மிதமான சூட்டில் வைத்துக் காயுங்கள்.

⭕ அதனுடன் ரோஜா விழுதை சேர்த்து, கிளறிக் கொண்டு இருங்கள்.

⭕ சில நிமிடங்கள் கழித்து, ரோஜா இதழ்களின் நிதம் எண்ணெய்யில் கரைந்து, எண்ணெய் மேலே பிரிந்து நிற்கும்.

⭕ இதனை அணைத்து, பாத்திரத்தை மூடி, 5-6 மணி நேரம் ஊற விடுங்கள்.

எண்ணெய் வடிகட்டி சேமித்தல்:

⭕ 5-6 மணி நேரம் கழித்து, சுத்தமான பருத்தித் துணியில் எண்ணெய்யை வடிகட்டி எடுத்து, காற்று புகாத வாட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

⭕ ஒரு பங்கு ரோஜா எண்ணெய்யுடன், 10 பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஆர்கானிக் ரோஜா எண்ணெயின் நன்மைகள்:
சரும ஆரோக்கியத்திற்கு:

⭕ ஆர்கானிக் ரோஜா எண்ணெய் சருமத்தில் உள்ள உலர்ச்சியை தடுத்து, அது மென்மையாகவும், ஈரமாகவும் வைத்திருக்கும்.

⭕ சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் துகள்களை அகற்றும் தன்மை கொண்டது.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு:

⭕ ரோஜா எண்ணெய் கூந்தல் வறட்சியை குறைத்து, நெகிழ்ச்சியான கூந்தலை மேம்படுத்துகிறது.

⭕ கூந்தல் வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் வேர்களை பலப்படுத்துகிறது.

அழகுச் சாதனப் பொருள்:

👉இயற்கையான ஆரோமாவை கொண்ட இந்த எண்ணெய் உடல் மற்றும் முகத்திற்கு மசாஜ் செய்வதற்கு சிறந்தது.

👉இதன் நறுமணம் மன நிம்மதியை அளிக்கிறது.

ஆர்கானிக் ரோஜா எண்ணெய் என்பது கெமிக்கல் இல்லாத இயற்கையான வண்ண அழகு சாதனப் பொருளாகும். இது மிகவும் எளிதான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி, விற்பனை செய்யக்கூடியது. இன்று ஆர்கானிக் பொருட்களுக்கு அதிக ஆர்வம் காணப்படும் வேளையில், இந்த எண்ணெய் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பெரும் பயனளிக்கும்.


Recommended Products

Recommended Products

Curtain LED String Light

Buy Now

Puppies Polished White Pebbles

Buy Now

Antique Wooden Fold

Buy Now

Artificial Potted Plants

Buy Now