தலைவலி என்பது பலருக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்சினையாக இருக்கலாம். பருவநிலை மாற்றம், வேலைப்பளு, உடல்நலப் பிரச்சினைகள், உணர்ச்சிவசப்படுதல், மனஅழுத்தம், தூக்கமின்மை, நீண்ட நேரம் செயல்போன மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல காரணங்களால் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். இந்த தலைவலிக்கு சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். இங்கே Petal Whisper வலைதளத்தில் தலைவலிக்கு உகந்த மூன்று முக்கிய உடற்பயிற்சிகளைப் பற்றி அறியலாம்.
Exercises that cure headaches Let's learn about three main exercises that are good for headaches
பயிற்சி 1: உடல் பின்புறம் வளையல்
- முதலில் கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, முழங்கால்களை மடக்காமல், விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும்.
- பின்பு கைகளை மெதுவாக தலைக்குமேல் உயர்த்தவும்.
- இப்போது இடுப்புப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, உடலை பின்புறமாக முடிந்தவரை வளைக்கவும்.
- மூச்சை உள் இழுத்தபோது குதிகால்களை மெதுவாக உயர்த்தவும்.
- இந்த நிலையில் 10 வினாடிகள் தங்கவும்.
- பின்னர் மூச்சை வெளியிட்டபடி குதிகால்களை கீழே இறக்கி, பழைய நிலைக்கு திரும்பவும்.
பயிற்சி 2: குப்புறப்படுக்கும் நிலை
- விரிப்பில் குப்புற படுக்கவும்.
- வலது காலை மடக்கி, வலது கையால் காலின் பாதத்தைப் பிடிக்கவும்.
- இடது கையை நேராக முன்புறம் நீட்டவும்.
- இதே போல் இடது காலையும் நேராக நீட்டவும்.
- இப்போது இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் அழுத்தம் கொடுத்து, உடலையும், கால்களையும் மேல்நோக்கி வளைக்கவும்.
இந்த நிலையில் 10 வினாடிகள் தங்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும். இந்த பயிற்சி மூளை நரம்புகளின் இயக்கத்தை சீராக்கி, மன அமைதியை வழங்கும்.
பயிற்சி 3: கால்களை முன்னும் பின்னும் நகர்த்தும் பயிற்சி
- விரிப்பில் நேராக உட்காரவும்.
- கால்களை நேராக நீட்டவும்.
- கைகளை தரையில் வைத்து, தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
- இப்போது பாதங்களை முன்னும் பின்னுமாக லேசாக நகர்த்தவும்.
- அதே நேரத்தில் தலையை மட்டும் கீழே இறக்கி, தாடை மார்பு பகுதியைத் தொட வேண்டும்.
இந்த பயிற்சி தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டின் நரம்புகளைச் சீராக்கி, தலைவலியை குறைக்கும்.